சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

தினத்தந்தி
|
23 Feb 2023 5:56 PM IST

சந்திரமுகி 2 படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


That's a schedule wrap on the sets of #CM2 ️ The star studded 3rd schedule came to an end today with the cast & crew joining for a group pic! #Chandramukhi2#PVasu @offl_Lawrence #KanganaRanaut @gkmtamilkumaran @LycaProductions #Subaskaran pic.twitter.com/Jb0RXIUipK

— Lyca Productions (@LycaProductions) February 23, 2023 ">Also Read:


மேலும் செய்திகள்